வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாக வவுனியா நகரசபை மற்றும் வவனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைவர்களிடம் காணி உரிமையாளர் முறையிட்டதையடுத்து குறித்த காணியை அவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் 5 ஏக்கர் வயல் காணியை பாதுகாப்புக் காரணங்களுக்காக தமது கட்டுப்பாட்டில் எடுப்பதாகவும் அதற்காகா 25 ஆயிரம் ரூபா தருவதாகவும் தெரிவித்து உரிமையாளரிடம் இருந்து குறித்த காணியை இராணுவம் அபகரித்ததாக தெரிவித்த நகரசபை தலைவர் தற்போது குறித்த காணியில் இராணுவத்தினர் நெல் விதைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந் நிலையில் குறித்த காணி தொடர்பாக அரசியல் மேல் மட்டங்களுக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் இதற்கு தீர்வினை பெற்று கொடுக்க அனைவரும் கரிசனை கொள்ள வேண்டும் எனவும் வவுனியாநகர சபை மற்றும் பிரதேசசபை தலைவர்கள் தெரிவித்தனர்.