முதற்தர கழகங்களுக்கிடையிலான டயலொக் கிண்ண றகர் போட்டியில் கண்டிக்கழகம் 28 - 19 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிபெற்றதுள்ளது.

கண்டிக்கழகத்திற்கும் இலங்கை விமானப்படை அணிக்குமிடையில் நடந்த மேற்படி போட்டியில் கண்டி அணி 28 புள்ளிகளையும், இலங்கை விமானப்படை அணி 19 புள்ளிகளையும்பெற்றது. 

கண்டி அணி 4 ட்ரைகளைப் பெற்று நான்கிற்கும் மேலதிகப் புள்ளிகளையும் பெற்று 28 புள்ளிகளைப் பெற்றது.

விமானப்படை அணி 3 ட்ரைகளையும், அவற்றில் இரண்டுக்குமான மேலதிகப்புள்ளிகளையும் பெற்றதன் மூலம் 19 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது.

இடைவேளையின் போது கண்டி அணி 17 - 7 என்ற அடிப்படையில் முன்னிலை வகித்தது. கண்டி அணிக்கு ரிச்சர்ட் தர்மபால 2 ட்ரைகளையும், ரொசான் வீரரத்ன மற்றும் விஸ்வமித்தர ஜயசிங்க ஆகியோர் தலா ஒரு ட்ரை வீதம் வைத்தனர். திலின விஜேசிங்க நான்கு ட்ரைகளுக்குமான மேலதிகப் புள்ளகளைப் பெற்றுக் கொடுத்தார். விமானப்படை அணி சார்பாக சூர்ய கிருசான், ரடுவ வசந்த ஆகியோர் ட்ரைகளை வைத்ததுடன் நுவன் பெரேரா, கயந்த இத்தமல்கொடை ஆகியோர் தலா ஒரு கொன்வேசன்கள் வீதம் மேலதிகப்புள்ளிகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.