சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய ஆபத்து ; மியன்மாரின் பாதையில் இலங்கை?

Published By: Digital Desk 4

11 Nov, 2018 | 11:08 AM
image

- பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட

நவம்பர் 9 வெள்ளிக்கிழமை இரவு பாராளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பின் பிரத்தியேகமான ஏற்பாடொன்றை மீண்டும் ஒருதடவை அப்பட்டமாக மீறும் செயலாக அமைந்திருக்கிறது. 

பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அடிக்கடி ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுவாரானால் அது சர்வாதிகார ஆட்சிக்கே கதவைத்திறந்துவிடும். சுதந்திரத்துக்குப் பின்னர் இலங்கை எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான அரசியலமைப்பு நெருக்கடி இதுவாகும்.நாட்டில் அரசியலமைப்பின் வழியிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றின் முற்றுமுழுதான நிலைகுலைவின் தொடக்கத்தையும் இது குறித்து நிற்கிறது.

 ஜனாதிபதி சிறிரேன அரசியலமைப்பை மீறுவதைப்போன்று மகிந்த ராஜபக்ச கூட தனது ஆட்சிக்காலத்தில் நடந்துகொண்டதில்லை.தனது அரசியல் இலக்குகளை அடைவதற்கு நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு போதுமானதாக இல்லை என்று கண்டபோது ராஜபக்ச அதற்கு ஒரு திருத்தத்தைத்தான் கொண்டுவந்தார்.

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணான முறையில் அக்டோபர் 26 நீக்கிய தனது நடவடிக்கையை அடுத்து மூண்ட ஒரு அரசியல் நெருக்கடியை அவரால் தீர்க்கமுடியாமல்போய்விட்டது.பாராளுமன்றத்தை இடைநிறுத்தி மூடிவைத்த ஜனாதிபதி சிறிசேனவினால் பிரதமராக மகிந்த ராஜபக்சவின் நியமனத்தைச் சட்டபூர்வமானதாக்கக்கூடியதாக  பெரும்பான்மைப்பலத்தைத் திரட்டமுடியாமல் போனதையடுத்து அரசியல் சிக்கல் மேலும் மோசமடைந்தது.இது அவராகவே உருவாக்கிக்கொண்ட சிக்கல்.அரசியலமைப்பை பாரதூரமான முறையில் ஒரு தடவை மீறிய தனது செயலினால் உருவான நெருக்கடியைக் கையாள்வதற்கு அரசியலமைப்பையும் அரசியலமைப்புரீதியான தார்மீகப் பொறுப்பையும் துச்சமென மதிக்கும்பாதையில் செல்வதற்கு சிறிசேன தீர்மானித்திருக்கிறார்.

இந்த விவகாரத்தில் நியாயத்தைப் பெறுவதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கும் இலங்கையின் எந்தவொரு பிரஜைக்கும் இப்போது இருக்கின்ற ஒரே மார்க்கம் உச்சநீதிமன்றத்தை நாடுவதேயாகும்.ஆனால்,அந்த மார்க்கத்தை ஐக்கிய தேசிய கட்சி தேர்ந்தெடுக்குமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.இந்தப் பிரச்சினை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்பட்டால், மிகவும் சர்ச்சைக்குரிய அரசியல் சிக்கல் ஒன்று குறித்து நீதியரசர்கள் தீர்மானிக்கவேண்டியிருக்கும். உச்சநீதிமன்றத்தி்ன் சுயாதீனத்தன்மையையும் அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக விழுமியங்களையும் மற்றும் பிரஜைகளின் ஜனநாயக சுதந்திரங்களையும் பேண்ப்பாதுகாப்பதில் அதற்கு இருக்கின்ற அரசியலமைப்புசார் கடமையையும் பரிசோதிக்கும் ஒரு களமாக இந்த விவகாரம் அமையும்.

சட்டவிரோதமானதும் அரசியலமைப்புக்கு விரோதமானதுமான வழியில் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு  பொதுத் தேர்தலை நடத்துவது ஜனநாயகம் அல்ல. அரசியல் எதிராளிகளுக்கிடையிலான படுமோசமான மோதல்களுக்கு வழிவகுக்கக்கூடியதாகவே தேர்தல் பிரசாரங்கள் அமையக்கூடிய ஆபத்து இருக்கிறது.

எந்த விதமான பச்சாதாபமுமின்றி ஜனாதிபதி சிறிசேன செய்துகொண்டிருக்கின்ற அரசியலமைப்பு மீறல்கள் அவரின் தற்போதைய அரசியல் தெரிவுகளைப்பற்றி மிகவும்  பாரதூரமான கேள்விகளைக் கிளப்பகின்றன.ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்கு அவர் நாட்டைக்கொண்டுசென்று அமிழ்த்தக்கூடும்.அதன் மூலமாக மியன்மாரின் வழியில் லங்கை செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது.சட்டத்தையோ அரசியலமைப்பையோ பற்றி கிஞ்சித்தும் அக்கறைப்படாத ஒரு நாடாக இலங்கை மாறிவிடுமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது.

சுதந்திரத்தின் பின்னர் இலங்கை எதிர்நோக்குகின்ற மிகவும் பாரதூரமான அரசியலமைப்பு நெருக்கடியிலிருந்து ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்குப் போராட நாட்டு மக்கள் அனைவரும் ஐக்கியப்படவேண்டும். இந்த நெருக்கடி தொடர்பில் பொது அபிப்பிராயம் மிகவும் ஆழமாகப்பிளவுபட்டதாகவ இருக்கின்றதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.ஒவ்வொருவருமே ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அக்கறைகொண்டவர்களாக இருக்கவும் மாட்டார்கள்.

இலங்கையின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பிரஜைகளை உள்ளடக்கிய பரந்தளவிலான ஒரு ஜனநாயக முன்னணி அமைக்கப்படவேண்டியது அவசியமானதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13