கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் துறையினருக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது கற்காளால் தாக்குதல் நடத்தி சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

சிலாபம் - பங்கதெனியா பகுதியிலேயே குறித்த தாக்குதல் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

தாக்குதலுக்கிலக்கான பஸ்ஸின் கண்ணாடி நொறுங்கியதோடு பயணி ஒருவரும் சிறு காயங்கிற்கு இலக்காகியுள்ளார். 

காயத்திற்குள்ளானவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று சென்றுள்ளதாகவும், குறித்த அசம்பாவிதத்திற்கான காரணங்கள் அறியப்படவில்லை எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சிலாபம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.