(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைத்திருந்த போதிலும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் நியமிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சர்கள் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி வரை இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களாக செயற்படுவார்கள் என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதித்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். பிரதம அமைச்சர் அலுவலகத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.