“கட்சி வெகு விரைவில் தேர்தல் ஆணையாளரை சந்தித்து தேர்தல் தொடர்பாக கலந்தாலோசிக்கும்” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இடம்பெற்று வரும் ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே கபீர் ஹாசீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு சட்டபூர்வமான வழிமுறைகள் உள்ளன. அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளிற்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்கும் என தெரிவித்தார்.