தென் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தி வந்த  ஸிகா வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் மிக வேகமாகப் பரவி வருகிறமை அறியப்பட்டுள்ளது.

 இதுவரை 116 பேர் தென் அமெரிக்காவில் ஸிகா வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தவிர பிரேசில், கொலம்பியா, வெனிசூலா உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகளிலும் கியூபா உள்ளிட்ட கெரிபீயன் நாடுகளிலும் ஸிகா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

பிரேசிலில் மாத்திரம் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஸிகா வைரஸ்ஸினால் பாதிக்கப்பட்டு  பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.