(நா.தினுஷா)

ஜனாதிபதி மைத்திரி எதிர்வரும் ஜனவரி மாதம் பொது தேர்தலை நடத்துவதற்கும் முயற்சித்து வருகின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் இந்த சர்வாதிகார முடிவுக்கு தேர்தல் ஆணைக்குழு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதோடு உயர் நீதிமன்ற தீர்ப்பினை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளது என  பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நேற்று  வரை தனக்கு பெரும்பான்மை உள்ளது , பாராளுமன்றத்தில்  113 ஆசனங்கள் தன்வசம் உள்ளதாக குறிப்பிட்டு வந்த மஹிந்த ராஜபக்ஷ அணி நேற்று  பாராளுமன்றத்தை தனகேற்றவாறு கலைத்துள்ளது. 

அவ்வாறு கலைப்பதற்கான அதிகாரம் இல்லை. ஜனாதிபதி மைத்திரியின் செய்றபாட்டினை ஏற்றக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அலரிமாளிகையில் இன்று காலை ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.