ஒரு கோப்பை கோப்பியை பருகுவதால் பல நல்ல பலன்கள் கிட்டுவதாக  வைத்திய நிபுணர்கள். பட்டியலிடுகிறார்கள்  அத்துடன் இந்த பட்டியல் முடியவில்லை. இன்னும் தொடர்கிறது.

‘மன அழுத்தத்திலிருந்து எம்மை விடுவிக்கிறது. 2ஆம் வகை  நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. இதய செயலிழப்பை தடுக்கிறது. பர்க்கின்சன்ஸ் நோயை கட்டுப்படுத்துகிறது. பித்தப்பையில் கல் வராமல் பாதுகாக்கிறது. கல்லீரலையும் பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. உங்கள் ஆயுளை அதிகரிக்கிறது.’ என இன்னும் பல உள்ளன.

ஒரு கோப்பியை தினமும் அருந்துவதால், கோப்பியில் உள்ள Phenylindanes என்ற வேதிப்பொருள் எம்முடைய மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. அதாவது மூளை ஆரோக்கியமாக இயங்குவதை உறுதி செய்கிறது. 

அத்துடன் இந்த வேதிப் பொருள், எம்முடைய மூளையின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், ஊக்குவிக்கும் பணியிலும் ஈடுபடுவதால் முதுமையில் சிலருக்கு ஏற்படும் பர்க்கின்சன்ஸ் மற்றும் அல்சைமர்ஸ் போன்ற பாதிப்புகளை வராமல் தடுக்கிறதாம். இதனால் தற்போது கோப்பியை அருந்துமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஆனால் எம்முடைய வைத்தியத்தில் உள்ள வாத, கப, பித்த நாடிகளில் உள்ளவர்கள் மட்டும் தங்களுக்கு கோப்பி அருந்துவது நலத்தைப் பயக்குமா? என்பதை ஒருமுறைக்கு இரு முறை வைத்தியர்களிடம் கேட்டு, உறுதிப்படுத்திக் கொண்டு கோப்பியை அருந்துவது நல்லது. அத்துடன் அனைவரும் தினமும் ஒரு கோப்பை கோப்பியை அருந்துவது பொதுவாக ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதே ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையாகவும் இருக்கிறது.

டொக்டர் சைமன்

தொகுப்பு அனுஷா.