நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்த ஜனாதிபதியின் பிரகடனம் அடங்கிய விசேட வர்த்தமானி இன்றிரவு வெளியாகியுள்ளது.

இலங்கையின் அரசமைப்பினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இன்று நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2019 ஜனவரி ஐந்தாம் திகதி புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறும் இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நவம்பர் 19 ம் திகதியில் ஆரம்பமாகி 26 ம் திகதி வரை நடைபெறும் எனவும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வு 17 அமர்வு இடம்பெறும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.