கொடுங்கோன்மையை தோற்கடிப்பதற்கு அனைவரும் அணி திரளவேண்டும் என முன்னாள் அமைச்சர்  மங்களசமரவீர கருத்து வெளியிட்டுள்ளார்

ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்துள்ளமை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பெரும்பான்மையில்லாததால் நம்பிக்கையிழந்த நிலையில் உள்ள ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை சட்டத்தின் ஆட்சியை ஒழுக்கத்தை போற்றி பேணுபவர்கள் அனைவரும் உருவாகிவரும் கொடுங்கோன்மையை தோற்கடிப்பதற்கு அணி திரளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.