ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போலி பிரதமருடன் சேர்ந்து இலங்கையின் அரசியலமைப்பை கழிவறைப் பேப்பரிற்கு சமமானதாக்கிவிட்டார் என ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அவர்களே எங்கள் நாட்டின் உத்தியோகபூர்வ பெயரிலிருந்து ஜனநாயகம் என்பதை நீக்குவதற்கான இன்னொரு வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.