மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சற்று முன்னர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்

ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்ததை குறித்த செய்தி வெளியாகிக்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேசத்தின் தலைவிதியை தீர்மானிப்பவர்கள் மக்களே என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் இதயசுத்தியுடனான சக்தி எங்கள் நாட்டின் முக்கியமான தருணத்தில் ஸ்திரதன்மை மற்றும் முன்னேற்றகரமான எதிர்காலத்தை வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் சரியான தெரிவை மேற்கொள்வார்கள் என நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்