(எம்.மனோசித்ரா)

சிங்கப்பூருடன் செய்துகொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைக்கமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எனினும் ரணில் விக்ரமசிங்க துறைமுக நகர திட்டத்தை சுமார் ஒன்றரை வருடங்கள் நிறுத்தி வைத்திருந்ததைப் போன்று சிங்கப்பூர் ஒப்பந்தத்தை முற்றாக நிறுத்தும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என  சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

தாய்லாந்து, சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் எதிர்காலத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட  உரையாற்றும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கொண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.

எந்தவொரு நாட்டுடனும் சர்வதேச ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளபடுமாக இருந்தால் அதன் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலமான மொழிபெயர்ப்புக்கள் காணப்பட வேண்டும் . ஆனால் சிங்கப்பூர் வர்த்தக ஒப்பந்த பிரதி இவ்விரு மொழிகளிலுமே இது வரையில் மொழி பெயர்க்கப்படவில்லை என்றார்.