(ஆர்.விதுஷா)

தற்போது நாட்டில் நிலவியுள்ள அரசியல் குழப்ப நிலைமையில் எந்த அரசாங்கம் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது அல்ல.  நாடு எதிர் கொண்டிருக்கின்ற பிரச்சினை ஜனநாயகத்திற்கு புறம்பாக முறையில் நாட்டின் அரசியல் அமைப்பு ஏற்பாடுகளுக்கு முரணான முறையில் செய்யப்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் கொண்டு வரக்கூடிய ஆபத்தான நிலையை தடுக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் என இலங்கை இளையோர் சட்டத்தரணிகள் சங்கத்தின்  சட்டத்தரணி  உறுப்பினர் தணுக்க நந்தசிறி  தெரிவித்துள்ளார்.

அரசியல் யாப்பு மீறப்படும் பட்சத்தில் ஜனநாயகம் மீறப்பட்டு மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் நிலைக்கு இட்டுச்செல்லும் நிலை  ஏற்படும். ஆகவே, தற்போதைய நிலையை ஜனநாயக ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்துவது  எமது பொறுப்பாகும்.

தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து   தமது அமைப்பின் நிலைப்பாடுகளை விளக்கவதற்காக  கொழும்பு சமூக மற்றும் சமய மத்திய நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை  இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.