2019ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலுவதற்கான புலமைப்பரிசில்களை  பெற்றுக் கொண்ட 36 இலங்கையைச் சேர்ந்த மாணவர்களை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்ச்சன் நிகழ்வொன்றின் மூலம் வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய விருதான புலமைப்பரிசில்களை பெற்றுக்கொண்டவர்கள் அவுஸ்திரேலியாவின் உயர் பல்கலைக்கழகங்களில் பொருளாதார வளர்ச்சி, பாலின சமத்துவம் மற்றும் ஆட்சி போன்ற துறைகளில் முதுமானிப் பட்டங்களை பெற்றுக்கொள்வர்.

1950களில் மேற்கொள்ளப்பட்ட அவுஸ்திரேலியாவின் கொழும்பு திட்டத்திற்கமைய இது வரை 1000த்திற்கும் அதிகமானவர்களுக்கு அவுஸ்திரேலியா புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளது.

சர்வதேச மாணவர்களுக்கு கல்விக்கான பிரபலமான இடமாக அவுஸ்திரேலியா விளங்குகிறது.

கடந்த ஆண்டில் 11,000ற்கு மேற்பட்ட இலங்கையர்கள் உட்பட சுமார் 753,000 மாணவர்கள் கல்வி கற்பதற்காக அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளனர்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆண்டுதோறும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய விருதுகளை வழங்கிவருகின்றது.

அவுஸ்திரேலியாவின் அடுத்த சுற்று புலமைப்பரிசில் விருதுகளுக்கான விண்ணப்பங்களை  2019ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் வரை விண்ணப்பிக்கலாம்.

இவ் விடயம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு  www.australiaawards.gov.au அல்லது www.australiaawardssrilanka.org    இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும்.