உலகப் போர் முடிந்த நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு லண்டனில் அமைந்திருக்கும் உலகின் மிக பிரபலமான "பிக் பென்" எனப்படும் மணிக்கூடு எதிர் வரும் ஞாயிற்றுக் கிழமை ஒளிக்கப்படவுள்ளது.

லண்டன் நேரப்படி 11 மணியளவில் 11 முறை ஒளிக்கும் பிக் பென் கடிகாரம் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில்  மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள மணிக்கூடுகளில் ஒளிக்கப்படவுள்ளமை விஷேட அம்சமாகும்.

1918இல் முடிவடைந்த உலகப் போரை அனுசரிக்கும் விதமாகவே இந் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வு மூலம் பிரித்தானிய அரசு போர் முடிந்து 100 ஆண்டுகளின் பின்னர் போரில் உயிரிழந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளது.