நடிகர் பொபி சிம்ஹா தயாரித்து நடித்திருக்கும் ‘அக்னிதேவ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெங்கட்பிரபு நேற்று மாலை வெளியிட்டார்.

சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான சாமிஸ்கொயர் படத்தில் ராவண பிச்சையாக நடித்து அனைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை பொபி சிம்ஹா. இவர் தற்போது கதையின் நாயகனாக நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் அக்னிதேவ். இந்த படத்தில் வலிமையான வில்லியாக மூத்த நடிகை மதுபாலா நடித்திருக்கிறார். 

படத்தைப் பற்றி இயக்குநர் ஜோன் போல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா பேசுகையில்,

குறித்த படத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக நடிகை மதுபாலா நடித்திருக்கிறார்.

நடித்திருக்கிறார் என்பதை விட அதகளப்படுத்தியிருக்கிறார் என்று சொல்லலாம். அவருடைய தோற்றம் ஏனைய வில்லி நடிகையாக புகழ்பெற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்கும். இந்த கதைக்கும் ஹீரோ பொபி சிம்ஹாவுக்கும் இடையே நடைபெறும் எலி பூனை போராட்டம் தான் படத்தின் கதை.’ என்றார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியானவுடன் நடிகை மதுபாலாவிற்கு ஏராளமானவர்கள் கையடக்க தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தப்படியே இருக்கிறார்கள். இணையத்தில் பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.