இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் அடை மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன், மாவட்டத்துக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தின் பாலங்கொடை, இம்புல்பே, அயகம, கலவான, இரத்தினபுரி, எல்பத்த ஆகிய ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டடவியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் அப் பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.