மட்டக்களப்பு  மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை  காரணமாக 5775 குடும்பங்களை சேர்ந்த 20187பேர்  பாதிக்கப் பட்டுள்ளதாக  மாவட்ட அரசாங்க அதிபர் மா .உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்.

நான்கு நாட்களாக பெய்துவரும் கடும் மழை  காரணமாக 10 நலன்புரி நிலையங்கள் உண்டாக்கப் பட்டு இடம்பெயர்ந்த மக்கள் பராமரிக்கப் பட்டு வருகின்றனர். 

10 நலன்புரி நிலையங்களிலும் 708 குடும்பங்களை சேர்ந்த 2400பேர்  இடம்பெயர்ந்துள்ளதாகவும்  வாகரையில்  8 நலன்புரி முகாம்களும் வாழைச்சேனையில் 1 முகாமும் கோரளை பற்று  மத்தியில் 1 முகாம்களிலும்  தங்க  வைக்கப்பட்டுள்ளனர்.

10 முகாம்களிலும் 1268குடும்பங்களை சேர்ந்த 4300பேர் இடம் பெயர்ந்துள்ளதுடன்  பல பாதைகளும் நீரில் மூழ்கியுள்ளது எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

சில பிரதேசங்களில் படகு சேவைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதுடன் 3 நாட்களுக்கான உளர் உணவு பொருட்களும் வழங்கப் பட்டுள்ளது.

புனானை யில்  ஏற்ப்பட  புகையிரத போக்குவரத்து தற்போது சீர்  செய்வதற்கு  நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது விவசாய நிலங்களும்  நீரில் மூழ்கி  காணப்படுகின்றது. 

மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் காற்றின்  வேகம் அதிகரித்துள்ளமையால் கரையோரங்களில் வாழ்கின்ற  மீனவர்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.