மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்கள் அரச கடமை முடித்து தனிமையில் வீதியால் சென்ற பெண் உத்தியோகத்தரின் தாலிக்கொடியை அபகரித்து கொண்டு தப்பிச் சென்றுள்ள சம்பவமொன்று கடந்த திங்கட்கிழமை காரைதீவு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு சாரதா வீதியில் வசிக்கும் இப்பெண் காரைதீவு பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றார். 

இவர் தனது அரச கடமை முடிந்து வீதியால் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் இருவர் பெண்னை வீதியில் தள்ளிவிட்டு அப்பெண்ணின் கழுத்திலிருந்த 6 இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த தங்க தாலிகொடியையும் சங்கிலியை அபகரித்துக் பெண்னை காயப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயங்களுக்குள்ளான பெண் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவ் சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவினர் மேலதிக விசாரணை மூலம் கொள்ளையர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.