அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னின் மத்திய பகுதியில் நபர் ஒருவர் சற்று முன்னர் பலரை கத்தியால் குத்திகாயப்படுத்தியுள்ளார்.

காவல்துறையினர் சிறிய எண்ணிக்கையானவர்கள் கத்திக்குத்திற்குஇலக்காகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்

நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெல்பேர்னின் போர்க் வீதியில் இடம்பெற்ற சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்வான்ஸ்டன் வீதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது என்ற தகவலை தொடர்ந்து  அந்த பகுதிக்கு நாங்கள் சென்றவேளையே இந்த சம்பவத்தை எதிர்கொள்ள நேரிட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் நபர் ஒருவரை கைதுசெய்து பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியாசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்;பிட்ட பகுதிக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.