“நான் பெண்களால் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன்”: திருமணத்தையே முற்றாக மாற்றி வினோதமாக்கிய மணமகன்…!

Published By: Digital Desk 8

09 Nov, 2018 | 12:18 PM
image

ஜப்பானை சேர்ந்த அகிஹிகோ கொண்டோ (35) என்ற நபர்  ஒருவர் கற்பனை கதாபாத்திரமான பெண்ணின் பொம்மையை விசித்திரமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் கொண்டே ஒரு நிறுவனத்தில் வேலை செய்தார். அங்கிருந்த பெண் உயர் அதிகாரிகள் குறித்த நபருடன்,  அடாவடிதனமாக நடந்து கொண்டதால், அவரின் வேலை பறிபோனது. இதிலிருந்தே பெண்கள் மீது அவருக்கு கோபம் இருந்தது.

மேலும், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கையில் இது போன்ற பிரச்சனைகள் வரும் என நினைத்த அவர்,

இதையடுத்து ஹட்சுன் மிகு என்ற கற்பனை கதாபாத்திர பாடகியின் பொம்மை உருவத்தை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் அப்பெண் பொம்மையை திருமணம் செய்து கொண்டார் கொண்டோ.

ஒரு ஆண் - பெண் திருமண நிகழ்வில் இருக்கும் கேக்குகள், பரிசு பொருட்கள், மோதிரம் போன்ற அனைத்து விடயங்களும் இத்திருமணத்திலும் இடம் பெற்றன.

மணமகனான கொண்டே முழு வெள்ளை நிற ஆடையிலும், பொம்மைக்கும் வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டும் திருமணம் நடைபெற்றது. 

குறித்த பாடகியின் சாயலில் பொம்மையை தெரிவுசெய்தமைக்கான காரணமாக கொண்டே கூறுகையில், நான் கவலையாக இருக்கும் போது ஹட்சுன் மிகுவின் பாடல்களை தான் கேட்பதாகவும், அது தனக்கு மனதுக்கு ஆறுதலாக இருப்பதாகவும், அதனால் தான் அதையே திருமணம் செய்ததாக  கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்