சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்த பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் 43ஆவது சீர்த்திருத்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அமைச்கர்கள் மற்றும் அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில்  வெளியிடப்பட்டுள்ள அதி விஷேட வர்த்தமானியான 2096 / 17இல் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை மத்திய வங்கி(CBSL) உட்பட அரச வங்கிகள் மீண்டும் நிதி மற்றும் பொருளாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது