இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளையோ அல்லது எதிர்கால நெருக்கடிகளையோ தீர்ப்பதற்கான அமெரிக்காவினதும் அல்லது வேறு எந்த வெளிநாட்டினதும் திறன் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது என இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சோன் டொனெலி தெரிவித்துள்ளார்

வோசிங்டன் டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர்இலங்கையின் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்கு முன்னணியில் நின்று டிரம்ப் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டால் அது எனக்கு ஆச்சரியமளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

வோசிங்டன் டைம்ஸ் பேட்டியின் தமிழாக்கம்  வீரகேசரி இணையம்

கேள்வி- இலங்கை உள்நாட்டு யுத்தத்திலிருந்து வெற்றிகரமாக மீண்டெழுவதாக தோன்றிய நிலையில் தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என்ன?

பதில்: இலங்கையில் உள்ள அனைத்தையும் போன்று இதுவும் குழப்பகரமான விடயம்.அடிப்படையில் இது முற்றுமுழுதாக உள்நாட்டு அரசியல் தொடர்பான நெருக்கடி.தனிப்பட்ட பகைமை,போட்டிகள் என்பனவும் இதற்கு காரணமாக உள்ளன.

ஒரு தசாப்தத்திற்கு முன்னர் முடிவடைந்த யுத்தத்திற்கும் தற்போதைய நெருக்கடிக்கும் நேரடி தொடர்புகள் இல்லை, அதேபோன்று சர்வதேச காரணகளிற்கும் தற்போதைய நெருக்கடிக்கும் நேரடி தொடர்பில்லை.

தற்போதைய நெருக்கடியில் தொடர்புபட்டுள்ள முக்கிய மூன்று தனிநபர்களும் கொழும்பில் நான் 20 வருடத்திற்கு முன்னர் பணியாற்றிவேளை எனக்கு அறிமுகமானவர்கள், நான் நன்கறிந்தவர்கள்.

இலங்கை தனித்துவமான உயிர்ப்பு மிக்க ஜனநாயகத்தை கொண்டுள்ளது.

உள்நாட்டு அரசியலில் இராணுவத்தின் தலையீடு இல்லாத முக்கிய தென்னாசிய நாடு இலங்கை

அதேவேளை அடிக்கடி மாறும் கூட்டணிகள் சுயநலத்திற்காக கட்சி மாறுபவர்கள்,பின்கதவு உடன்பாடுகள்,ஊழல்கள் ஆகிய பாரம்பரியத்தை கொண்ட நாடு இலங்கை

2- ஜனாதிபதி சிறிசேன ஏன் கடந்த மாதம் விக்கிரமசிங்கவை நீக்கினார்? ரணில் விக்கிரமசிங்க ஏன் இதனை எதிர்க்கின்றார்?

பதில்- ஜனாதிபதி சிறிசேனவிற்கும் பிரதமர் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான கூட்டணி என்பது தனிப்பட்ட நலன்களிற்கான கூட்டணியே இது உண்மையான கூட்டு இல்லை அல்லது பகிரப்பட்ட கொள்கை நிகழ்ச்சிநிரலோ இல்லை.அவர்களது அரசியல் பின்னணிகள் வேறானவை.

சிறிசேன கொழும்பிற்கு வெளியே உள்ள சிறிய கிராமமொன்றில் சாதாரண சூழ்நிலையில் வளர்ந்தவர்.இடதுசாரி போக்கையுடைய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்.அவர் ரணில்விக்கிரமசிங்கவை விட மகிந்த ராஜபக்சவுடன் அரசியல் பின்னணி மற்றும் ஜனரஞ்சக நோக்குநிலையை கொண்டவர்.

விக்கிரமசிங்க வலதுசாரி ஐக்கியதேசிய கட்சியின் தலைமைத்துவத்தை சுவீகரித்துக்கொண்ட கொழும்பின் பொருளாதார சமூக உயர்குழாமின் வாரிசு.

ஓட்டப்பந்தயத்தின் நடுவில் குதிரையை மாற்றுவதன் மூலம் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தனக்கு சாதகமான நிலையை ஏற்படுத்த சிறிசேன எண்ணியிருக்கலாம்.

இதனை ரணில் வி;க்கிரமசிங்க ஏன் எதிர்க்கின்றார் என்பதும் வெளிப்படையானது-அவர் பலவீனமான எதிர்கட்சியின் தலைவராகயிருக்க விரும்புவதை விட பிரதமராகயிருக்கவே விரும்புவார்.

3- மகிந்த ராஜபக்ச சமூகங்களின் மத்தியில் பிரிவினையை தூண்;டக்கூடியவர் முன்னாள் வலுவான மனிதர் என கருதப்படுகின்றார். ஏன் ஜனாதிபதி இவரிற்கு ஆதரவளிக்கின்றார்?

பதில்-மகிந்த ராஜபக்ச உண்மையில் வலுவான மனிதர் திறமைவாய்ந்த சவாலான அரசியல்வாதி.விடுதலைப்புலிகள் அமைப்பை தோற்கடித்து இறுதியாக உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தவர் என்பதனால் மக்கள் மத்தியில் இன்னமும் ஆதரவுள்ளவராக காணப்படுகின்றார்.

மூன்று வருடங்கள் அதிகாரமில்லாதவராக காணப்பட்ட மகிந்த ராஜபக்சவே தற்போதைய நெருக்கடி மூலம் பலன்பெற்றுள்ளார்.

சிறிசேனவின் கீழ் செயற்படுவது அவரது நோக்கமல்ல நேரடியாகவோ மறைமுகமாகவோ  அதிகாரம் செலுத்தவதே மகிந்த ராஜபக்சவின் நோக்கம் என  ஆய்வாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

தனிப்பட்ட ரீதியில் கொழும்பில் அரசியல் திருப்பங்கள் சுழற்சியை முடித்து விட்டன என நான் கருதுகின்றேன்

கேள்வி- ஒரு ஆசிய நாளிதழ் இலங்கையை இந்தியாவும் சீனாவும் தங்கள் ஆதிக்கத்திற்காக மோதிக்கொள்ளும் களம் என வர்ணித்துள்ளது. இது சரியா?

பதில்- இது அளவிற்கு அதிகமான மதிப்பீடு என கருதலாம்.உள்நாட்டு அரசியல்  சர்வதேச தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை  ஏற்படுத்தினார்.

அவர் பாரிய அதிகளவிற்கு விமர்சனத்திற்குள்ளான  உட்கட்டமைப்பு திட்டங்களை ஆரம்பித்தார், இந்த திட்டங்கள் பொருளாதார மதிப்பீடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டவையாக தோன்றவில்லை மாறாக உள்நாட்டு அரசியல் நோக்கங்கள் மற்றும் குறுகிய அரசியல் இலாபத்தை அடிப்படையாக கொண்டவையாகவே காணப்படுகின்றன.

ராஜபக்ச அதிகாரத்தில் இல்லாத மூன்று வருடங்களி;ல் சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் கசப்பானவையாக மாறியுள்ளன.

இதன் சீனாஇவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தலையிட்டு;ள்ளது இதற்கு இலங்கையிலும் வெளிநாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் அது சீனா இலங்கை உறவுகள் நெருக்கமடைவதற்கு வழிவகுக்கலாம்.

எந்த சந்தேகமும் இன்றி இந்தியா சீனாவின் போட்டியாளரே.குறிப்பாக இந்தியாவின் ஆதிக்கமும் செல்வாக்கும் பல நூற்றாண்டுகாலமாக காணப்படும் பிராந்தியத்தில் இது உண்மையே.

இலங்கை தொடர்பான சீனா இந்தியா மோதல்கள் அதிகரிப்பதை எதிர்காலத்தில் நாங்கள்காணலாம்;. 

ஆனால் புவிசார் அரசியல் மேலாதிக்கம் என்ற சொல் சீனாவிற்கோ அல்லது இந்தியாவிற்கோ உள்ள உண்மையான மூலோபாய முக்கியத்துவத்தை மிகைப்படுத்துகின்றது என நான் கருதுகின்றேன்

கேள்வி- இலங்கையின் தற்போதைய நெருக்கடியை தணிப்பதற்கு அமெரி;க்கா பங்களிப்பு செய்யவேண்டும் என கருதுகிறீர்களா?

பதில்- நிச்சயமாகயில்லை.

இலங்கையில் அமெரிக்காவிற்கு உள்ள நலன்களையோ அல்லது உலகின் மற்றைய பக்கத்தில் உள்ள, 12 மணித்தியால வித்தியாசத்தை கொண்ட ஒரு பகுதியில்  ஏற்பட்டிருக்கும் இரண்டாம் அடுக்கு சவால்கiளிற்கு தீர்வை காண்பதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அமெரிக்காவின் செல்வாக்கையோ அல்லது அதற்கு நாங்கள் தயாராகயிருக்கின்றோம் என்பதையோ நான் மிகைப்படுத்தி கூற மாட்டேன்.

ராஜபக்ச காலத்தில் இலங்கையுடனான எங்கள் உறவுகள் பாதிக்கப்பட்டன.குறிப்பாக உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தம் இடம்பெற்ற விதம் காரணமாக இவை பாதிக்கப்பட்டன.

கடந்த மூன்று வருட காலங்களில் இலங்கையுடனான எங்கள் உறவுகள் ஓரளவிற்கு முன்னேற்றமடைந்துள்ளன.ஆனால் எங்கள் அடிப்படை நலன் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றது.

அரசியல் நெருக்கடிகளின் முடிவை பொறுத்து இந்தியாவும் ஏனைய சகாக்களும் இலங்கை தொடர்பில் குறிப்பிடத்தக்க ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க முன்வந்தால் அமெரிக்கா அதற்கு ஆதரவு வழங்கும் என நான் கருதுகின்றேன்.

ஆனால் இலங்கையின் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பதற்கு முன்னணியில் நின்று டிரம்ப் நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டால் அது எனக்கு ஆச்சரியமளிக்கும்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடிகளையோ அல்லது எதிர்கால நெருக்கடிகளையோ தீர்ப்பதற்கான அமெரிக்காவினதும் அல்லது வேறு எந்த வெளிநாட்டினதும் திறன் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படுகின்றது என நான் கருதுகின்றேன்.