டிம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிடா நகரிலுள்ள வியாபார நிலையமொன்றை கும்பலொன்று அடித்து சேதத்துக்குட்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்ற மாலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த வியாபார நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்த நபர்களுக்கும் வியாபார நிலையத்தின் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக கைகலப்பு ஏற்பட்டு வியாபார நிலையம் உடைக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு பிரதேச மக்கள் வழங்கிய தகவலை அடுத்து டிம்புள்ள பத்தனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

குறித்த வியாபார நிலையத்திற்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை மதிப்பிடப்படவில்லை.