சுமார் 2000 வருடங்கள் பழமைவாய்ந்த "வைன்" மதுபானத்தை மத்திய சீனாவில் உள்ள ஹினான் மாகாணத்தில் அமைந்துள்ள அகழ்வாராச்சிப் பகுதியில் வைத்து அகழ்வாராச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
சுமார் 3.5 லிட்டர் எடையுள்ள மஞ்சள் நிற சீன ரக ஒயின், திறந்த உடனே பலமான மணம் வீசியதாகவும் அகழ்வாராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டெடுக்கப்பட்ட இந்த திரவத்தின் அல்ககோல் அளவை அறிய ஆராய்ச்சி அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அந்த கல்லறையில் மனித எலும்புகளுடன் ஒரு காட்டு வாத்தின் உருவம் கொண்ட விளக்கும் கணடுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கண்டெடுக்கப்பட்ட வைன் மேற்கு ஹான் ராஜ வம்சத்தை (202 B.C - A.D 8) சேர்ந்து இருக்கலாம் எனவும் அது ஆவியாகுவதை எப்படி தடுத்தார்கள் என்ற முழு தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை.
ஆனால் இதுபோன்ற அல்ககோல் குப்பிகளை இதற்கு முன்பும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவை அரிசி அல்லது ஷோர்கவுமை போன்ற மூல பொருட்களை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவை பெரிய வெண்கல பாத்திரங்களில் வைத்து முக்கிய சடங்குககளில் அவை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2010, ஆராய்ச்சியாளர்களால் 2,400 வருட பழங்கால , சூப் இருக்கும் பானை ஒன்று சியான் விமானதளம் விரிவாக்கத்தின் போது கண்டெடுக்கப்பட்டது. இந்த கண்டெடுப்பு சீனாவின் பழங்காலத்து போர் வீரர்களான டேரக்கோட்டா வாரியர்களின் காலத்தை சேர்ந்தவை என்பதும் குறிப்பிட்டதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM