புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இன்று இடம்பெறவுள்ள இச் சந்திப்பில் சிங்கப்பூர் ஒப்பந்தம் மற்றும் சைட்டம் தொடர்பான விடயங்கள் கலந்துரையபடப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பொதுச் சேவையின் திறமையான செயற்பாடு குறித்து இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.