மஹிந்த அரசு தொடரும் மாற்றுத்திட்டமும் கைவசம் - ஜனாதிபதி மைத்திரி

Published By: R. Kalaichelvan

09 Nov, 2018 | 10:34 AM
image

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான  அரசாங்கம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும். 

எமக்கு போதியளவு பெரும்பான்மை உள்ளது. இந்த விடயத்தில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கலைக்கும் உத்தேசம் எனக்கில்லை.அது குறித்து நான் சிந்திக்கவில்லை. 

மஹிந்தவுடன் இணைந்து நாம் அடுத்த கட்ட செயற்பாட்டை மேற்கொள்வோம். 

அரசாங்கத்தை முன்னெடுப்போம்.இந்த விடயத்தில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாக இருந்தால் அதற்கும் மாற்றுத் திட்டத்தை நான் வைத்துள்ளேன். 

அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபேகம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

அரசியலமைப்புக்கு ஏற்ற வகையிலேயே நான் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்துள்ளேன். அவரது தலைமையிலேயே தொடர்ந்தும் ஆட்சி முன்னெடுக்கப்படும். அதற்கான பெரும்பான்மை எம்மிடம் உள்ளது. இந்த விடயத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்படுமானால், அதற்கான மாற்றுத் திட்டம் என்னிடம் உள்ளது. இதனால், எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. எமது ஆட்சிதான் தொடர்ந்தும் நடைபெறும். 

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் மீண்டும் உருவாகும் என்று கூறப்படும் கதைகளை எவரும் நம்பத் தேவையில்லை. அவ்வாறான நிலை ஏற்படமாட்டாது. 14ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டவுள்ளேன்.

 பிரதமராக தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ஷவே செயற்படுவார். அதில் எத்தகைய மாற்றமும் ஏற்படப் போவதில்லை. 

புதிய அரசாங்கத்தின் உருவாக்கும் விடயம் தொடர்பில் நான் நிபுணர்களுடன் ஆராய்ந்தே நடவடிக்கை எடுத்திருந்தேன். 

பல தரப்புடனும் கலந்துரையாடியே இந்த முடிவினை எடுத்துள்ளேன். பாராளுமன்றத்தை நான் கலைக்க போவதாக கூறப்படுகின்றது. பாராளுமன்றத்தை கலைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. 

மன ரீதியில் கூட நான் அவ்வாறு சிந்திக்கவில்லை. 

பாராளுமன்றம் கலைக்கப்படப் போவதாக செய்திகள் வெ ளியானதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் எம்.பி.க்கள் பலர் என்னுடன் கலந்துரையாடுவதற்கு நேரம் கேட்டுள்ளனர். 

தற்போது பாராளுமன்றத்தை கலைத்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் போய்விடும் இதனால்தான் அவர்கள் என்னுடன் சந்திப்பு மேற்கொள்வதற்கு முயன்று வருகின்றனர்.அவர்களை சந்தித்து நான் பேசவுள்ளேன். 

2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க கூட்டங்களின் போது தனது கைப்பையைக்கூட கொண்டு செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. கைப்பைக்குள் குண்டு கொண்டு வருவதாக அன்று அரசாங்கத் தரப்பினால் குற்றம் சாட்டப்பட்டது. 

இவ்வாறான நிலைமையை மறந்து தற்போது சந்திரிகா குமாரதுங்க செயற்பட்டு வருகின்றார்.

மஹிந்தவுடன் இணைந்து நாம் எமது பயணத்தை முன்னெடுப்போம். எமது ஆட்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். ஜனவரி மாதத்திலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுப்போம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே முன்னெடுக்கப்படும். இந்த விடயத்தில் பிரச்சினை எழுமானால் என்னிடம் மாற்றுத் திட்டம் உள்ளது. அந்த திட்டத்தை நான் முன்னெடுப்பேன். எனவே யாரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை.

 நிம்மதியாக நீங்கள் நித்திரை கொள்ளலாம். நானும் நிம்மதியாக நித்திரை கொள்வேன் என்று தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சியின் யாப்பில் மாற்றம் செய்வதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்தமாற்றங்களை அமைச்சர் பைஸர் முஸ்தபா முன்வைத்தார்.இதற்கு எகமனதாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58