(பா.ருத்ரகுமார்)

நல்லாட்சி அரசாங்கத்தின்  செயற்பாடுகளை குழப்பவோ அல்லது ஆட்சியை கவிழ்ப்பதற்கான   செயற்பாடாகவோ  ஒன்றிணைந்த எதிர்க்கட்சி  பேரணியை முன்னெடுக்கவில்லை. மாறாக குறித்த போராட்டம் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தியியை வெளிக்காட்டி நிற்கின்றது என்று  சோசலிஷ மக்கள் முன்னனி கூறியுள்ளது. 

மேலும் மக்களின் வாக்குரிமையை இல்லாதொழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதேபோன்றதொரு மாபெரும் எதிர்ப்பு போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அந்த கட்சி எச்சரித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை கொழும்பில் அமைந்துள்ள  என்.எம்.பெரேரா மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  சோசலிச மக்கள் முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதன் பிரதிநிதிகள் மேற்கண்டவாறான விடயங்களை குறிப்பிட்டனர்.