அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள மதுபானசாலையில் மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட மர்மநபரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 10 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

தவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.