“தமிழ் பேசும் மக்கள் வழங்கிய ஆணையை அடகுவைத்து அநாகரீக அரசியல் நடத்தும் கட்சி அல்ல எமது தமிழ் முற்போக்கு கூட்டணி. கொள்கை அரசியலை உயிர்நாடியாகக் கருதி நேர்வழியில் செல்லும் எமது அரசியல் பயணம் கோடிகளுக்காக திசைமாறாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட எம்.பியுமான வேலுகுமார்  தெரிவித்தார்.

மலையகத்தை மையப்படுத்தி இயங்கும் அனைத்துக்கட்சிகளும் ‘தவளை அரசியல்’ நடத்தும் கட்சிகள் அல்ல என்பதையுயம், மக்களுக்கான அரசியல் என்றால் என்னவென்பதையும் தமிழ் முற்போக்கு கூட்டணி நிரூபித்துவிட்டது என்றும் அவர் கூறினார்.