அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள இரவுவிடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்

தவுசன்ட் ஒக்ஸ் என்ற விடுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

30க்கும் மேற்பட்ட தடவை துப்பாக்கி துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள பொலிஸார்  ஆகக்குறைந்தது ஆறு பேர் காயமடைந்துள்ளதை உறுதி செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாக அதேவேளை காயமடைந்த பலரை பொதுமக்கள்  அப்பகுதியிலிருந்து அகற்றுவதை காண்பிக்கும் படங்கள் சமூக  ஊடகங்களில் வெளியாகியுள்ளன

நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயல்கின்றோம் தாக்குதலை மேற்கொண்டவர்கள் உள்ளே உள்ளனரா என்பது தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்  என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்