சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவே தவிர சட்டரீதியான குடியேற்றங்களுக்கு எதிராக எதுவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று மீள்குடியேற்ற புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 719 குடும்பங்களைச் சேர்ந்த 2,218 சிங்கள மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.தே.கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. புத்திக பத்திரன எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோதே அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தனது பதிலில்;
மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த சனத்தெகை 5 இலட்சத்து 82 ஆயிரத்து 323 ஆகும்.
இதில் 3 ஆயிரத்து 306 பேர் சிங்கள மக் கள் ஆவார்கள். இவ் எண்ணிக்கையில் 961 குடும்பங்களைச் சேர்ந்த 3288 பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களில் 719 குடும்பங்களைச் சேர்ந்த 2218 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இம்மக்களுக்கு எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் அரச உதவிகள், சேவைகள் வழங்கப்படுகிறது.
சட்டவிரோதமான ஆக்கிரமிப்புக்கு எதிராகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படுத்தப்படவில்லை. யுத்தத்தால் வீடுகளை இழந்தவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரதேச செயலக மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தகவல்கள் பேணப்படுகிறது.
சுயவிருப்பின் பேரில் மீள் குடியேற வந்த இடம்பெயர்ந்த சிங்கள குடும்பங்கள் அவர்களின் நிரந்தர இடங்களில் மீள் குடியேற்றப்பட்டுள்ளன.
இவர்களுக்கு எவ்விதமான பாரபட்சமும் இன்றி அடிப்படை வசதிகள் படிப்படியாகச் செய்து கொடுக்கப்படுகின்றது.
அத்தோடு காணி ஆணையாளரினால் 15.11.2013 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட பத்திரிகை விளம்பரம் வழங்கப்பட்டது.
இடம்பெயர்ந்த மக்களின் காணிப்பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் சுயவிருப்பின் பேரில் மீள் குடியேற விரும்புவோர் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இங்கு குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு அரச கொள்கைக்கு அமைய மீள் குடியேற்றக்கொடுப்பனவு உட்பட இதர வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றது என்றார்.
அதேவேளை புத்திக பத்திரண எம்.பி. யின் கோரிக்கைக்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அங்குள்ள தேரருடன் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM