(இரோஷா வேலு)
கந்தளாய் மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் வைத்து 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இளைஞர் ஒருவர் நேற்று மாலை கந்தளாய் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தம்பளகாமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய அலி அக்பர் மொஹமட் ரஸ்தான் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் பொலிஸாருக்கு போலி நாயணத்தாள் குறித்து கிடைக்கப்பெற்ற விசேட தொலைப்பேசி அழைப்பின் அடிப்படையில் கந்தளாய் நகரில் நேற்று முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த இளைஞர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கந்தளாய் நகரின் மணிக்கூட்டு கோபுரத்தின் அருகில் வைத்து சந்தேகத்திற்கிடமாக குறித்த இளைஞரின் நடமாட்டத்தை அவதானித்த பொலிஸார் அவர் சோதனையிடப்பட்டார். இதன்போது அவரிடமிருந்த 5000 ரூபா நாணயத்தாள்கள் 10 சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது அவை அனைத்தும் போலி நாணயத்தாள்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான தொடர் விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM