நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு ‘கடாரம் கொண்டான் ’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளியான சாமி ஸ்கொயர் படம், எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. இருந்தாலும் நடிகர் சீயான் அடுத்ததாக தூங்காவனம் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மலேசியாவில் படமாக்கப்பட்டு வந்த இந்த படத்திற்கு தற்போது கடாரம் கொண்டான் என்று பெயரிட்டு, ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இது குறித்து இயக்குநர் பேசுகையில்,

‘மலேஷியாவில் வாழும் நிழல் உலக தாதா பற்றிய படம் இது. வித்தியாசமான எக்சன் வித் திரில்லர் எண்டர்டெயினராக இருக்கும். இதில் அக்சரா ஹாசன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ’ என்றார். 

சீனிவாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார் என்பதும், இந்த படத்தில் கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக ‘கடாரம் கொண்டான்’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சீயான் விக்ரமை அனைத்து தரப்பினரும் பாராட்டுகிறார்கள்.