கிழக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்திலீடுபட்டு வருவதால் அனைத்து பஸ் சேவைகளும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த போராட்டத்தினால் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் பஸ் சேவைகள் முற்றாக இடம்பெறவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு பிரதான பஸ் டிப்போவிலிருந்து இன்று காலை முதல் பஸ்கள் எதுவும் சேவையில் ஈடுபடாமையால் மக்கள் பெரும் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

சம்பள உயர்வு கோரியே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு  பஸ் டிப்போ ஊழியர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பொதுமக்கள் காத்திருந்தபோதிலும் பஸ் சேவைகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.