அமெரிக்காவில் 16 மாத குழந்தையை வைத்து ஆபாச படம் எடுத்த இரண்டு பேரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் உள்ள லிவர்பூலை சேர்ந்தவர் ஜேசன் கோப்(40). சிரகுஸ் நகரைச் சேர்ந்தவர் எமிலி ஓபர்ஸ்ட்(23). அவர்கள் இருவரும் சேர்ந்து 16 மாத குழந்தையை பயன்படுத்தி ஆபாச படம் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த  ரகசிய தகவலையடுத்து பொலிஸார் ஜேசன் மற்றும் எமிலியின் வீடுகளில் நடத்திய அதிரடி சோதனையின் மூலம்  முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களை பறிமுதல் செய்தனர்.

குழந்தையை வைத்து ஆபாச படம் எடுத்த குற்றத்திற்காக பொலிஸார் ஜேசன், எமிலி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். பொலிஸார்  விசாரணையில் எமிலி கூறியிருப்பதாவது,

ஜேசன் என்னை அடிக்கடி தொடர்பு கொண்டு அந்த 16 மாத குழந்தையின் ஆபாச படங்களை கேட்டார். அதனால் நானும் 45 புகைப்படங்களை அனுப்பி வைத்தேன் என்றார்.

ஜேசன் மற்றும் எமிலி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் தலா 50 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.