பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியுசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட்போல்ட் ஹட்ரிக் சாதiiயை நிகழ்த்தியுள்ளார்.

நியுசிலாந்து  பாக்கிஸ்தான் அணிகளிற்கு இடையில் அபுதாபியில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் டிரென்ட்போல்ட் இந்த சாதனையை நிகழ்;த்தியுள்ளார்.

வெற்றி பெறுவதற்காக 267 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் பாக்கிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியவேளை போல்ட் தனது இரண்டாவது ஓவரின்; முதல் பந்தில் பகார் ஜமானை போல்ட் முறையில் ஆட்டமிழக்க செய்துள்ளார்.

போல்ட்டின் அடுத்த பந்தில் பாபர் அசாம்  டெய்லரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.

மூன்றாவது பந்தில் முகமட் ஹபீஸ் எல்பிடபில்யூ முறையில் ஆட்டமிழந்துள்ளார் எனினும் அவர் நடுவரின் தீர்ப்பை டீஆர்எஸ் செய்த போதிலும் அது பலனளி;க்கவில்லை.

பாக்கிஸ்தானிற்கு எதிரான  ஹட்ரிக்கின் மூலம் டிரென்ட்போல்ட் ஒருநாள் போட்டிகளில் ஹட்ரிக் வீழ்த்திய மூன்றாவது நியுசிலாந்து வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார்

நியுசிலாந்துடான இந்த போட்டியில் பாக்கிஸ்தான் 47 ஓட்டங்களால் தோல்வியை  தழுவியுள்ளது.