கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த இருபத்திநான்கு மணித்தியாலத்தில் பெய்த மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள அனைத்துக் குளங்களினதும் நீர்மட்டம் திடீர் என அதிகரித்துள்ளது.
கிளிநொச்சியில் பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் நான்கும் இடை நிலை நீர்ப்பாசனக் குளங்கள் ஐந்தும் உள்ள நிலையில் திடீர் நீர்மட்டம் அதிகரிப்பினால் இடை நிலை நீர்ப்பாசனக் குளங்களான கனகாம்பிகை குளம் , வன்னேரிக்குளம் என்பன வான் பாய்கிறது காலநிலை தொடர்ந்து இவ்வாறு செல்லுமானால் கிளிநொச்சியில் உள்ள மீதி ஏழு குளங்களும் வான் பாயும் என எதிர்வு கூறப்படுகிறது.

கடந்த இருபத்துநான்கு மணிநேர மழையில் பின்னர் கிளிநொச்சிக் குளங்களின் வாசிப்பு இரணைமடுக்குளம் 25 அடி 6 அங்குலமாகவும் அக்கராயன் குளம் 19 அடி 4 அங்குலமாகவும் கல்மடுக் குளம் 23 அடி 4 அங்குலமாகவும் கரியாலை நாகபடுவான் குளம் 4 அடி 01 அங்குலமாகவும் முறிப்புக் குளம் 15அடி 5 அங்குலமாகவும் பிரமந்தனாறுக் குளம் 11 அடியாகவும் குடமுருட்டிக் குளம் 05அடி 01 அங்குலமாகவும் வன்னேரிக்குளம் 10 அடியாகவும் கனகாம்பிகைக் குளம் 11 அடி 01 அங்குலமாகவும் உயர்ந்துள்ளது
இவற்றில் இடை நிலை நீர்ப்பாசனக் குளங்களான வன்னேரிக்குளம் 06 அங்குலமும் கனகாம்பிகைக் குளம் 07 அங்குலமும் வான் பாய்கின்றமை குறிப்பிடத்தக்கது .











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM