ஹெரோயின் போதைப் பொருளுடன் கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரிடமிருந்து 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருளின் பெறுமதி 6 மில்லியன் ரூபாவாகும் எனவும் இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.