(ரொபட் அன்டனி)

திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்ததாக எவருமே எமது ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யவில்லை.  முறைப்பாடு செய்திருந்தால் நாங்கள் அவ்வாறு இரகசிய முகாம்கள் இருந்ததாக கூறப்படும் இடங்களை பார்வையிட்டிருப்போம் என்று காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்தார். 

ஜனாதிபதி ஆணைக்குழுவென்பது இந்த பிரச்சினை தொடர்பில் பரிந்துரைகளும் அறிக்கைகளையும் மட்டுமே வழங்குவதற்கு அதிகாரத்தை கொண்டுள்ளது. மாறாக பிரச்சினைகளை நேரடியாக தீர்ப்பதற்கு அதிகாரமும் வளமும் எம்மிடம் இல்லையெனவும் பரணகம குறிப்பிட்டார். 

முல்லைத்தீவில் இவ்வார இறுதியில் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அமர்வுகளை நடத்தவுள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.