(ஆர்.யசி)

ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்காது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையாக செயற்பட்டாலே போதும், அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை நாம் பெற்றுத்தருவோம். அரசியல் தீர்வு விடயத்தில்  மைத்திரி -மஹிந்த கூறுவதையே சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூறுகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியிடம் விளைபோயுள்ளார் ஒரு சிலர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்க்கட்சி தலைவரையும் தவறாக வழிநடத்தி வருகின்றனர் எனவும் அக்கட்சி கூறுகிறது

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபொது அக்கட்சியின் உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர  இதனைக் குறிப்பிட்டார்.