கிழக்கு மாகாண அரச பஸ் ஊழியர்கள் தங்களது சம்பள உயர்வை வலியுறுத்தி பணி பகிஷ்கரிப்பினை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு பஸ் நிலையத்துககு முன்பாக அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து குறித்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இன்று மாலை 5 மணியில் இருந்து பணி பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப் பட்டதுடன், தங்களுக்குள் சாதகமான பதில் கிடைக்கும் வரைக்கும் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.