கொழும்பு வெள்ளவத்தையினூடான ரயில் பாதையிலுள்ள பாலம் புனரமைக்கப்படுவதால் கரையோர ரயில் சேவையில் தாமதநிலை காணப்படுகிறது என ரயில் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், நாளை மாலை 4.30 வரை கொழும்பு கோட்டையிலிருந்து கல்கிஸ்ஸை வரையும் ஒரு பாதையிலான ரயில் சேவை மாத்திரமே முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.