ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நடப்பவைகள் குறித்து எவரும் அலட்டிக்கொள்ள தேவையில்லை என  ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர கருத்து வெளியிட்டுள்ளார்.

 ரணில் விக்கிரமசிங்க குறித்து சிறிசேன தெரிவித்த வண்ணாத்திப்பூச்சி குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் மத்தியில கருத்து தெரிவிக்கையிலேயே ஹிருணிகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிசேனவின் கருத்தை ஹிருணிகா கண்டித்துள்ளார்.

ஜனாதிபதி தான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கும் அறைக்கும் செல்வாரா எனவும் அவர் கேள்விஎழுப்பியுள்ளார். 

ஏனையவர்கள் மீது நான் சுமத்தும் குற்றச்சாட்டுகளை நிருபிக்கவேண்டிய தேவை ஏற்படுமென்றால் நான் அவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனையவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எங்களிற்கு தேவையற்ற விடயம்,இது எங்கள் பிரச்சினைகளிற்கு தீர்வை கொண்டுவராது என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.