(இராஜதுரை ஹஷான்)

சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் நடுநிலையாக  செயற்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா அல்ல பாராளுமன்றம் என்பதை அவர் புரிந்துக் கொள்ள வேண்டும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரமே பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்  பெற வேண்டும் . தற்போதைய நெருக்கடியினை சபாநாயகர் மேலும் வலுப்படுத்தினால் அவர் பாரிய விளைவுகளை  எதிர்கொள்ள நேரிடும் எனவும்  தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்.

தற்போது பாராளுமன்றத்தில் எவ்விதமாக மாற்றங்களும் இடம் பெறவில்லை, கடந்த 26ம் திகதிக்கு முன்னர் எவ்வாறு பாராளுமன்றம் காணப்பட்டதோ அதே போன்றே செயற்படும் என்று   குறிப்பிட்டுள்ளமை  ஜனாதிபதியின் தீர்மானத்தினை மீறுவதாகும்.சபாநாயகரின் தீர்மானத்தினை பாராளுமன்ற பிரதி செயலாளர்நாயகம்  குறிப்பிட்டுள்ளது.

சாபாநாயகர் ஐக்கிய தேசிய கட்சிக்காகவே செயற்படுகின்றார். கடந்த காலங்களில்  பாராளுமன்றத்தில் இடம் பெற்ற  பல நிகழ்வுகளில் இதனை நிரூபித்துள்ளார். 14ம் திகதி பாராளுமன்றம் புதிய அமைச்சரவையின்  செயற்பாடுகளே இடம்பெறும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டு வரவுள்ளதாக குறிப்பிடப்படும் நம்பிக்கையில்லா பிரேரனையினை பெரும்பான்மையுடன்  நிரூபிப்போம் எனவும் தெரவித்தார்.