ஹக்மன தெனகம என்ற இடத்தில் இன்று காலை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் அவரது மனைவியும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

மெதமுலானைக்கு சென்றுகொண்டிருந்த வேளை அவர்களது ஜீப் டிரக்டர் ஒன்றுடன் மோதியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜீப் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியது அதேவேளை டிரக்டரை செலுத்தி வந்த நபர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச பயணம் செய்த ஜீப்பை செலுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எனினும் இந்த விபத்து காரணமாக கோத்தபாய ராஜபக்சவிற்கும் அவரது மனைவிக்கும் எதுவித காயமும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.