தமிழ் அரசியல்வாதிகள், பிரபாகரன் உருவாக்கிய அமைப்பு குறித்து முரளிதரனின் கருத்து

Published By: Vishnu

07 Nov, 2018 | 02:56 PM
image

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அவசியம் எனத் தொடர்ந்து கூறிவருகின்றனர். எனினும் அவ்வாறானதொரு தீர்வு அவசியமானதா என இலங்கை அணியின் முன்னள் சுழல் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை தமிழ் மக்களுக்காக பிரபாகரன் உருவாக்கிய அமைப்பு முதலில் தமிழர் தொடர்பான செயற்பாடுகளை சரியாக முன்னெடுத்திருந்தாலும், பின்னர் அவ்வமைப்பும் கொலைகளைச் செய்ததுடன், தீவிரவாத அமைப்பொன்றாக மாறியது எனவும் அவர் கருத்து வெளியிட்டார். 

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

அவர் தொடர்ந்தும் கூறியுள்ளதாவது,

நாட்டில் பெரும்பாலான மக்கள் அரசியல்வாதிகளிடம் கேட்பது ஜனநாயகத்தையோ, தமது உரிமைகளையோ அல்ல. மாறாக மூன்று வேளையும் உண்பதற்கு உணவும், தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கு வாய்ப்பளிக்கும் பொருளாதார வசதியினையுமே கேட்கின்றனர். வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி அரசியல்வாதிகள் தமது மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல், வேறு விடயங்களில் அவதானம் செலுத்துவதே தற்போது பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்குக் காரணமாக உள்ளது.

தற்போது இவ்வாறு கூறுவது தொடர்பில் மக்கள் என்னைத் தவறாக நினைக்கக்கூடும். ஆனால் உண்மையிலேயே பாராளுமன்றத்திற்கு மக்கள் தமது பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதன் ஊடாக ஜனநாயகம், உரிமைகள், நீதியை நிலைநாட்டல் என்பவற்றைக் கேட்பதில்லை. அவற்றை மக்கள் இரண்டாம் பட்சமானவையாகவே கருதுகின்றார்கள். மூன்று வேளைக்கான உணவு, பிள்ளைகளுக்கான சிறந்த கல்வி என்பவற்றையே அவர்கள் தமது பிரதிநிதிகளிடம் கேட்கின்றனர். 

வடக்கில் ஒன்பது வயதுடைய சிறுமியொருவர் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றது. எனினும் இவ்விடயம் குறித்து தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியிருக்கவில்லை. தமிழ்  அரசியல்வாதிகள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசுகின்றனர். உரிமை தொடர்பிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் குறித்தும், ஜனநாயகம் குறித்தும் பேசுகின்றனர். எனினும் பொருளாதார சிக்கலில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி தொடர்பில் அவர்கள் அவதானம் செலுத்தவில்லை.

தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அவசியம் எனத் தொடர்ந்து கூறிவருகின்றனர். எனினும் அவ்வாறானதொரு தீர்வு அவசியமானதா எனக் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். கடந்த காலத்தில் இருபக்கத்திலும் தவறுகள் இடம்பெற்றுள்ளன. சிங்களவர்கள் அனைவரும் தவறிழைத்துள்ளனர் என்று என்னால் கூறமுடியாது. சிங்களவர்களில் தமிழர் பிரச்சினை மற்றும் யுத்த சூழ்நிலையினை தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக 5 சதவீதத்தினர் மாத்திரமே பயன்படுத்திக் கொண்டனர். அதனால் நாடு முழுவதிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதேவேளை தமிழ் மக்களுக்காக பிரபாகரன் உருவாக்கிய அமைப்பு முதலில் தமிழர் தொடர்பான செயற்பாடுகளை சரியாக முன்னெடுத்திருந்தாலும், பின்னர் அவ்வமைப்பும் கொலைகளைச் செய்ததுடன், தீவிரவாத அமைப்பொன்றாக மாறியது. கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தினால் இருதரப்பிலும் பெருமளவில் பாதிப்பும், இழப்புக்களும் ஏற்பட்டன. 

நாட்டில் 80 சதவீதமானவர்கள் சிங்கள பௌத்தர்களாவர். இந்த நாடு அவர்களுக்கே உரித்துடையது. எவ்வளவுதான் ஏற்றுக்கொள்வதற்கு மறுத்தாலும் நாம் இந்த நாட்டின் சிறுபான்மையினை மக்கள் என்பதே உண்மை. ஆனால் கிரிக்கெட் விளையாட்டுத்துறையில் நான் எனது திறமையினை வெளிப்படுத்திய போது சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் என்ற பேதமின்றி நாட்டு மக்கள் அனைவரும் எனக்கு ஆதரவளித்தார்கள். நானும் இந்நாட்டின் பிரஜை என்ற வகையிலேயே அனைவரும் பேதமின்றி ஆதரவளித்தனர்.

ஆனால் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் மக்களுக்காகச் செயற்படுவதாகக் கூறினாலும், உண்மையில் சாதாரண மக்கள் தொடர்பில் அவர்கள் சிந்திப்பதே இல்லை. தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவது நாட்டில் சிறந்த ஆட்சியினை மேற்கொள்வதற்கும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஆகும். அதனைச் செய்யமுடியாவிட்டால் தாம் ஒதுங்கிக் கொள்வதுடன், அடுத்து வருபவருக்கு வழிவிட வேண்டும். அதனைவிடுத்து மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமைக்கு ஒவ்வொரு காரணங்களைக் கூறவது ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எனக் கூறுவதைப் போன்று உள்ளது. 

நாட்டில் தற்போது அதிகாரம் தமக்குரியது என்ற சச்சரவு ஏற்பட்டுள்ளது. அதனை சட்டத்தின்படி விரைந்து தீர்க்க வேண்டும். உயர் நீதிமன்றத்தின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுவதை விடுத்து, மக்களை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

மேலும் தற்போது ஒவ்வொரு கட்சிகளும் தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் மேற்கொள்ளும் மக்கள் பேரணியில் அரசியல்வாதிகளின் உரையினைக் கேட்பதற்காகவே மக்கள் கலந்துகொள்கின்றார்கள் என நினைக்கின்றீர்களா? கட்சி ஆதரவாளர்கள் 10 பேர் வேண்டுமானால் உரையைக் கேட்பதற்காகக் கலந்துகொள்ளலாம். ஆனால் ஏனையோர் பணம், உணவு கொடுத்து, பேரூந்துகளில் அழைத்துவரப்படுகின்றார்கள். ஒவ்வொரு நாளையும் பல்வேறு பிரச்சினைகளக்கு மத்தியில் கடக்கின்ற மக்கள் அரசில்வாதிகளின் உரையினைக் கேட்பதற்காக வருவார்கள் என நான் கருதவில்லை என்றார்.

- தமிழில் நா.தனுஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13