ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் சட்டவிரோதமானவையில்லை என இங்கிலாந்தின் நேஸ்பி  பிரபு தெரிவித்துள்ளார்.

பிரதமரை நீக்கிவிட்டு புதிய பிரதமரை நியமித்த  சிறிசேனவின் நடவடிக்கை  இலங்கையின் நலனை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிசேனவின் இந்த நடவடிக்கை வழழைக்கு மாறானது என்றாலும்   இலங்கையின் அரசமைப்பிற்கு முரணானதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி நாட்டின் நலனை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பார் என கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் அவரை பல தடவை சந்தித்துள்ளேன்,சிறிசேன புத்திசாலி  அவர் என்ன முடிவையெடுத்திருந்தாலும் நாட்டின் நலனை கருத்தில்கொண்டே எடுத்திருப்பார் என நான் நிச்சயமாக நம்புகின்றேன் எனவும்  நேஸ்பி பிரபு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியின் நடவடிக்கை அரசமைப்பிற்கு முரணானதா இல்லையா என்பதை வெளிநாட்டவர் ஒருவர் தீர்மானிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.